வியாழன், 31 ஜூலை, 2014

தாளவாடியில் 23-வது சாலை பாதுகாப்பு வாரவிழா-2012

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
 லோகு டிரைவிங் ஸ்கூல் வலைப்பக்கதிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.



Logu driving school- லோகு டிரைவிங் ஸ்கூல்-சத்தி

அன்புடையீர்,
                                    வணக்கம். 
                லோகு டிரைவிங் ஸ்கூல் - வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
    ஆயுள் காப்பீடு மற்றும் வாகன காப்பீடு உட்பட நம்ம இந்தியாவில் பல்வேறு வகை காப்பீட்டு வசதிகள் உள்ளன.அதாவது,

காப்பீட்டின் வகைகள் 
வாகனக் காப்பீடு, இல்லக் காப்பீடு, மருத்துவக்காப்பீடு, உடல் ஊனக் காப்பீடு, விபத்துக் காப்பீடு, ஆயுள் காப்பீடு, சொத்துக் காப்பீடு, வாகனக் காப்பீடு,  ஓட்டுனர் பயிற்சி பள்ளிக் காப்பீடு, அடமானப் பாதுகாப்புக் காப்பீடு, நிதி இழப்புக் காப்பீடு , முடக்கப்பட்ட நிதிகள் காப்பீடு, வளர்ப்பு பிராணிகள் காப்பீடு, மாசுக் காப்பீடு, வாங்கும் காப்பீடு,  பயணக் காப்பீடு,  ஊடகக் காப்பீடு,  சமூகக் காப்பீடு, பயிர்க்காப்பீடு,உட்பட இன்னும் பலவகை காப்பீடு வசதிகள் உள்ளன.தற்போதைக்கு நமக்குத்தேவையான வாகனக்காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு பற்றி சிறிது இங்கு காண்போம்.

வாகனக் காப்பீடு

உடைந்த வாகனம்
விபத்து நேரிடும் பட்சத்தில் ஏற்படும் நிதி இழப்பிலிருந்து வாகனக் காப்பீடு பாதுகாப்பளிக்கிறது. இது உங்களுக்கு மற்றும் உங்கள் காப்பீட்டு நிறுவனத்திற்கு இடையே உள்ள ஒப்பந்தம் ஆகும்.
         நீங்கள் ப்ரீமியம் செலுத்த ஒப்புக்கொள்கிறீர்கள், உங்கள் பாலிசியில் விவரிக்கப்பட்டுள்ளபடி, உங்கள் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் உங்களுக்கு ஏற்படும் நஷ்டங்களுக்கு ஈட்டுத் தொகையை அளிக்க ஒத்துக்கொள்கிறது. வாகன காப்பீடு உங்கள் சொத்திற்கான சட்டப் பூர்வ பொறுப்பு மற்றும் மருத்துவ பாதுகாப்பினை அளக்கிறது.
  1. உங்கள் காருக்கு ஏற்படும் பாதிப்பு அல்லது உங்கள் கார் திருடப்பட்டால் சொத்து பாதுகாப்பு உங்களுக்கு ஈட்டுத்தொகை அளிக்கும்.
  2. பிறருக்கு மற்றும் பிறரது சொத்திற்கு நீங்கள் ஏற்படுத்தும் காயம் மற்றும் பாதிப்பிற்கான சட்டபூர்வ பொறுப்பினை லயபிளிட்டி கவரேஜ் வழங்குகிறது
  3. காயங்கள் சிகிச்சைக்கான செலவீனங்கள், மீட்பு மற்றும் சில நேரங்களில் ஏற்படும் சம்பள இழப்பு மற்றும் இறுதிச்சடங்கு செலவீனங்களுக்கு மருத்துவ பாதுகாப்பு ஈட்டுத்தொகை அளிக்கும்.
ஒரு வாகன காப்பீட்டு பாலிசியில் ஆறு வகையிலான கவரேஜ்கள் இருக்கும். இவற்றுள் சிலவற்றை வாங்க பெரும்பாலான நாடுகள் அறிவறுத்துகிறது. அனைத்தையும் அல்லநீங்கள் ஒரு காருக்கு பைனான்ஸ் வாங்கினால் உங்களுக்கு பணம் தரும் தரப்பிற்கு தேவைப்பாடுகள் இருக்கும். பெரும்பாலான வாகன காப்பீடுகள் ஆறுமாதம் முதல் 1 வருடம் வரையிலான கால அளவீனத்தைக் கொண்டிருக்கும்
யுனைட்ட்ட் ஸ்டேட்ஸ் - ல் உங்கள் காப்பீட்டு நிறுவனம் உங்கள் பாலிசியை மறுஆக்கம் செய்வது குறித்தும் மற்றும் நீங்கள் ப்ரீமியம் செலுத்த வேண்டியது குறித்து உங்களுக்கு மின் அஞ்சல் வழியாக தெரியப்படுத்த வேண்டும்.
ஆயுள் காப்பீடு பற்றி பின்னர் பார்ப்போம்.

     

லோகு புகை பரிசோதனை நிலையம்

அன்புடையீர்,
 வணக்கம். லோகு டிரைவிங் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
          அனைத்து வாகனங்களுக்கும்சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு கருதி புகை பரிசோதனை அவசியம் செய்ய வேண்டும்.
  "புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு ஆண்டு பிறகு ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் புகை பரிசோதனை செய்து சான்று பெற வேண்டும். அதற்கான சான்று வாகனத்தில் ஒட்டப்பட வேண்டும். புகை பரிசோதனை செய்யாமல் உள்ள வாகனங்கள் சோதனையின் போது கண்டறியப்பட்டால், இரு சக்கர வாகனங்களுக்கு 250 ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களுக்கு 500 ரூபாயயும்,கனரக வாகனங்களுக்கு ரூ.1000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்,'
 சரியான பராமரிப்பு இல்லாத, ஆயுள் காலத்துக்கு பின்னரும் தொடர்ந்து பயன்படுத்தும் வாகனங்களில் இருந்து அளவுக்கதிமாக புகை வெளியாகிறது.
 சாலைகளில் செல்லும்போது இத்தகைய வாகனங்களில் இருந்து வரும் புகையை சுவாசிப்பவர்கள் நேரடியாக நுரையீரல் பாதிப்புக்கு ஆளாக நேரிடுகிறது.
 டீசல் பயன்படுத்தும் வாகனங்களில் இருந்து வெளியாகும் கறும் புகையை விட பெட்ரோல் பயன்படுத்தும் வாகனங்கள் வெளிப்படுத்தும் வெண் புகை மிகவும் ஆபத்தானது எனக் கூறப்படுகிறது.டீசல் பயன்படுத்தும் வாகனங்களில் கார்பன் அளவு 65 எச்எஸ்யு (ஹேப் ஸ்ட்ரிச் யூனிட்) அளவுக்கு குறைவாகவும், பெட்ரோல் வாகனங்களில் கார்பன் மோனாக்ûஸடின் துகள்கள் 4500 பார்ட்டிக்கல் பெர் மீட்டருக்கு குறைவாகவும் இருக்கவேண்டும். இதற்கு மேல் இருக்கும் வாகனங்கள் இயக்கப்படுவதற்கு தகுதியற்றவை. ஒரு சில வாகனங்களுக்கு அதன் மாடலுக்கு ஏற்ப இந்த அளவீடு மாறுபடும்.  ஒருமுறை புகை பரிசோதனை செய்தால் அவை 6 மாதங்கள் மட்டுமே செல்லுபடியாகும். அதிகமான புகையை வெளிப்படுத்தும் இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 250, இலகுரக வாகனங்களுக்கு ரூ. 500, கனரக வாகனங்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படுகிறது 

 எனவே, வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு வாகனங்கள் தொடர்பாக எந்த பணிக்காக வந்தாலும் புகை பரிசோதனை சான்று இணைக்கப்பட வேண்டும்.
 புகை பரிசோதனையை அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயப்படுத்தி அதிக புகையை வெளிப்படுத்தும் வாகனங்களை பயன்படுத்துபவர்கள் மீது போக்குவரத்து போலீசாரும், வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.
புகை பரிசோதனை பற்றிய விளக்கம் பின்னர் பதிவிடப்படும்.

LOGU DRIVING SCHOOL - SATHYAMANGALAM.

அன்புடையீர்,
         வணக்கம். லோகு டிரைவிங் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம். 
      ''மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்-உயிருடன் வாழ்வீர்''
(1)பாதுகாப்பான வேகத்தில் ஓட்டவும்,
(2)மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டாதீர்,
(3)வேகத்தை விட பாதுகாப்பே முக்கியம்,
(4)திரும்பும் முன் சிக்னல் செய்யவும்,
(5)பின்புறம் சிவப்பு அவசியம்,
(6)இரவில் எதிரில் வாகனம் வரும்போது முகப்பு விளக்கு ஒளியை குறைக்கவும்,
(7)ஆளில்லாத லெவல் கிராசில் நின்று பார்த்து செல்லவும்,
(8)சாலை சந்திப்புகளில் வேகத்தை குறைத்து கவனமாக செல்லவும்,
(9)சாலை சந்திப்புகளில் வலதுபுற வாகனங்களுக்கு முதலில் வழிவிடவும்,
(10)முன் செல்லும் வாகனத்திலிருந்து போதிய இடைவெளி கொடுத்து செல்லவும்,
(11)சிக்னல் பெற்ற பிறகே முந்திச்செல்லவும்,
(12)வளைவில் முந்த வேண்டாம்,
(13)குறுகிய சாலையில் முந்த வேண்டாம்,
(14)பாலங்களில் முந்த வேண்டாம்,
(15)அனுமதிக்கப்பட்ட வேக அளவை மீற வேண்டாம்,
(17)வாகனத்தை கவனமாக ஓட்டவும்,
(18)வாகனத்தை இடதுபுறமாக ஓட்டவும்,
(19)சிக்னல் விளக்குகளை மதித்து செல்லவும்,
(20)போக்குவரத்து சின்னங்களை மதித்து செல்லவும்,
(21)போக்குவரத்து காவலர்களின் சிக்னலுக்கு கட்டுப்பட்டு செல்லவும்,
(22)மருத்துவமனை உள்ள இடங்களில் ஒலி எழுப்பாதீர்,
(23)அனுமதிக்கப்பட்ட எடைக்கு மேல் பாரம் ஏற்றாதீர்,
(24)நோயாளி வாகனம்,தீயணைப்பு வாகனம்,வி.ஐ.பி.வாகனங்களுக்கு முதலில் வழிவிடவும்,
(25)சாலை விதிகளை கடைப்பிடிக்கவும்,
(26)மழை நேரங்களில் வேகத்தைக்குறைத்து கவனமாக செல்லவும்,
(27)இரவு நேரங்களில் கவனமாக ஓட்டவும்,
(28)நிற்கும் முன் சிக்னல் செய்யவும்,
(29)மஞ்சள் கோட்டை தாண்டாதீர்,
(30)வாகனத்தை உரிய வரிசையில் ஓட்டவும்.

லோகு டிரைவிங் ஸ்கூல்-சத்தியமங்கலம்

அன்புடையீர்,
           வணக்கம். 
LOGU HEAVY DRIVING SCHOOL-
                   SATHYAMANGALAM -  ERODE Dt.
                      லோகு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி  மற்றும் லோகு வாகன புகை பரிசோதனை நிலையம்-சந்தன நகரம் என்று போற்றும் நம்ம சத்தியமங்கலத்தில் உள்ள சிறந்த பயிற்சிப்பள்ளி ஆகும். அனைத்து வாகனங்களுக்கும் வாகன புகை பரிசோதனை செய்ய அரசு பதிவு பெற்ற நிலையம் ஆகும்.மற்றும் லோகு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் இலகு ரக வாகனம்,மிதரக வாகனம், கனரக வாகனம்,ஓட்டிப் பழக அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்பயிற்றுநர்களால் சிறந்த பயிற்சி கொடுத்து டிரைவிங் லைசென்ஸ் பெற்று தரப்படும்.நடத்துநர் லைசென்ஸ் அதற்கான பயிற்சி கொடுத்து எடுத்து தரப்படும்.அவ்வப்போது புத்தாக்கப்பயிற்சி கொடுக்கப்படும்.முதலுதவி பயிற்சி கொடுக்கப்படும். சாலைவிதிகளை கற்றுக்கொடுத்து,அனைத்து வாகனங்களுக்கும் -புதிய வாகனங்களுக்கு பதிவு செய்தல்,பதிவுச் சான்று புதுப்பித்தல்,அனுமதிச்சான்று பெற்று தருதல்,வாகன காப்பீட்டு வசதி செய்து கொடுத்தல், சாலை வரி கட்டுதல்,உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளும் விரைவாக செய்து கொடுக்கப்படும்.
 பதிவேற்றம்; தேதி 31-07-2014 வியாழக்கிழமை.